
















Srimad Bhagavatham Lecture
SKdas tamil s bhag lecture given on Dec 11, 2017
Songs
Janmastami Song
Tirupavai Song
ISKCON Brahma Samitha with Tamil Meaning
ஹரே கிருஷ்ண கதை சுருக்கம்
இஸ்கான் என்று அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை உருவாக்கிய அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி ஶ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ஆவணப்படமே ஹரே கிருஷ்ணா திரைப்படம்.
தன்னுடைய 70 வது வயதில் 1965 ல் வெறும் நாற்பது ருபாய் மற்றும் பகவத்கீதை,ஶ்ரீமத் பாகவதம் போன்ற இந்திய வேத இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒரு சரக்கு கப்பல் முலம் அமெரிக்காவை சென்றடைந்த ஶ்ரீல பிரபுபாதர்,இந்திய கலாச்சாரம் மற்றும் தத்துவங்களை மேற்கத்திய நாடுகளில் மிகவும் சிரமப்பட்டு அம்மக்களின் மனதில் விதைத்து,போதை பழக்கம்,சூதாட்டம்,தவறான பாலுறவு போன்ற தீய பழக்க வழக்கத்திலிருந்து அவர்களை காப்பாற்றி எவ்வாறு கிருஷ்ண பக்தியை உலகெங்கிலும் பரவச் செய்தார் என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கோப்புகளை ஒன்று சேர்த்து திரைவிருந்தாக மக்களுக்கு வழங்குவதே இப்படம்.எத்தனையோ ஆன்மீக குருமார்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் ஶ்ரீல பிரபுபாதர் அவர்களிலிருந்து மிகவும் தனித்துவம் பெற்றவர்.காரணம் ” ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ,ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்ற மகாமந்திரத்தை மட்டுமே தன்னுடைய துணையாகக் கொண்டு உதவிக்கு ஆளில்லாமல் 70 வது வயோதிகராக அமெரிக்க வீதிகளில் தங்க இடமில்லாமல் சுற்றித் திரிந்து 11ஆண்டுகளில் உலகம் முழுவதும் பகவத்ககீதையின் முக்கியத்துவத்தை உணரச்செய்து மேல்நாட்டு மக்களின் வாழ்க்கை நெறியை மாற்றி உலக மக்களை பாவகரமான வாழ்விலிருந்து காப்பாற்றிய தலை சிறந்த இந்தியர், ஆன்மீக வழிகாட்டி ஶ்ரீல பிரபுபாதர் என்பதை அனைத்து தரப்பு மக்களுக்கும் உணர்த்ததுவதே இந்த ஹரே கிருஷ்ணா திரைப்படம்.